• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வளரும் இசையமைப்பாளர்களில் கவர்ந்தவர் யார்? இளையராஜா பதில்

வளரும் இசையமைப்பாளர்களில் கவர்ந்தவர் யார்? இளையராஜா பதில்

இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா

சென்னை எத்திராஜ் கலைக்கல்லூரியில் தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடிய இசைஞானி இளையராஜா கல்லூரி மாணவிகளை பாடவைத்து உற்சாகம் அளித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் தங்களை கவர்ந்தவர் யார்? என்ற கேள்விக்கு என்று இசைஞானி இளையராஜா பதில் அளித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் 75-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் கலைக்கல்லூரியில் "எத்தினிக் டே" என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு நடனமாடிய மாணவிகள் வயலின், கீ-போர்டு மூலம் இசைத்துக் காட்டினர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜா, மாணவிகளுடன் இணைந்து தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். திரைப்படங்களுக்கு எவ்வாறு இசைமைப்பது என்பது குறித்து விளக்கமளித்த இளையராஜா, மாணவிகளை பாடவைத்து உற்சாகம் அளித்தார்.

கல்லூரி மாணவிகளுடன் தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடும் இளையராஜா


அதன்பின்னர் இந்நிகழ்ச்சியில் மாணவிகளுடன் உரையாடிய இளையராஜா, தன் பாடல்கள் செவியோடு மட்டும் செல்லாமல் இதயத்திலும் இடம்பெறும் என்றார். இசை கற்றால் மட்டும் போதாது எனக் கூறிய அவர், நம்பிக்கையுடன் எதையும் எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

வானம் தான் உங்களுக்கு எல்லை என நினைத்து பறவைகள் போல் பறக்க வேண்டுமென மாணவிகளுக்கு அறிவுறுத்திய அவர், குருவி பறப்பது, அருவி கொட்டுவது போன்ற காட்சிகளை பார்க்கும்போது ஏற்படும் ரம்மியமான உணர்வுகள் இசை மூலாகவும் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் யார் உங்களை கவர்ந்தவர் என்ற மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்த இளையராஜா, தனக்கு தெரியாத ஒன்று இன்னொருவர் பாடல் மூலம் பிரதிபலிக்க வேண்டும், அப்படி எதுவும் வராத போது மற்ற பாடல்களை எப்படி ரசிக்க முடியும் எனக் குறிப்பிட்டு நிகழ்ச்சியை முடித்தார்.

Also see...  தேர்தல் விநோதங்கள்: திருமணக் கோலத்தில் வாக்களிக்க வந்த தம்பதி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: