ஆன்லைன் மூலம் பரதநாட்டியம் பயிற்சி - அணிவகுக்கும் இசை வகுப்புகள்

Youtube Video

ஊரடங்கு காலத்தில் பள்ளி கல்லூரி பாடங்கள் அலுவலக மீட்டிங் உள்ளிட்ட அனைத்துமே ஆன்லைனில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் பரதநாட்டியம் வீணை உள்ளிட்ட இசை வகுப்புகளும் ஆன்லைனில் அணிவகுக்க தொடங்கிவிட்டன.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை சூளை பகுதியில் மொட்டைமாடி ஒன்றில் மாலை நேரத்தில் பரதநாட்டிய சலங்கை ஒலிகள் காற்றில் நம் காதுகளை வந்தடைந்தன.

என்னவென்று பார்த்தால் ஆன்லைன் மூலம் தன் மாணவர்களுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறார் கல்லூரி மாணவி சாய் பூஜா. கடந்த 15 ஆண்டுகளாக பரதநாட்டியம் கற்றுள்ள இவர் மூன்று ஆண்டுகளாக ஏராளமான குழந்தைகளுக்கு பரதம் கற்றுக் கொடுக்கிறார்.

தற்போது கோடை காலம் என்பதால் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்க தொடங்கி இருக்கிறார் பொறியியல் மாணவி சாய் பூஜா. இவரிடம் அக்கம் பக்கத்தில் உள்ள சில மாணவிகள் நேரில் வந்து பரதம் கற்றுக் கொள்கிறார்கள்.

வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் மன இறுக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதனால் ஆன்லைன் மூலம் பரதம் கற்பதாகவும் கூறுகின்றனர் சிறுமிகள் அமிர்தாவும் கீர்த்தனாவும்.

Also read... பசுமையாக மாறிய குப்பை மேடு - தூய்மைப் பணியாளரின் வேளாண் ஆர்வத்திற்கு குவியும் பாராட்டுகள்

சாய் பூஜாவின் பரதம் மட்டுமல்ல அவரது அம்மா நிர்மலா ஆன்லைன் மூலம் வீணை மற்றும் கர்நாடக இசையை கற்றுக் கொடுக்கிறார். தொடர்ச்சியான பயிற்சி அவசியமானது என்பதால் இந்த முறையை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அந்த வகையில் பரதமும், வீணையும், கர்நாடக இசையும் ஆன்லைன் மூலம் மாணவர்களை சென்று சேர்கின்றன.

ஆயக்கலைகளில் ஒன்றான இசைக்கலை இப்போது ஆன்லைன் கலையாக மாறி இருப்பது அடுத்தகட்ட பரிணாமம். இசை எந்த வடிவத்தில் சென்றாலும் அதற்கு எப்போதும் உண்டு சன்மானம்.
Published by:Vinothini Aandisamy
First published: