ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம்!

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம்!

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம்!

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம்!

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த ரூ.11.03 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் வள்ளுவர் கோட்டத்தை மேம்படுத்துவற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதோடு, கலைஞர் நினைவு நூலகம், கீழடி அருங்காட்சியகம், கிராவுக்கு நினைவிடம் சுமார் 101 கோடியில் அமையவுள்ளதாக பொதுப்பணித் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூலகம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மதுரையில் கட்டப்படும் கலைஞர் நூலகத்திற்கு 99 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருப்பதாக பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலக் கட்டடம் அடித்தளம், தரைத்தளம் மற்றும் கூடுதலாக ஆறு தளங்களை உள்ளடக்கி சுமார் 2 லட்சத்து 250 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாகவும், கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் அரிய நூல்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, மின் நூலகம், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு என பல்வேறு வகையான பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன.

Also read: மேகதாது விவாகாரம்: தமிழக அரசு என்ன செய்ய போகிறது? பேரவையில் குரல் எழுப்பிய உறுப்பினர்கள்

சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிறந்த கற்கும் சூழலும் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதியோர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய அனைவருக்கும் எளிதாக நூலகப் பிரிவுகளுக்கு பயணிக்கும் வகையில் மின் தூக்கி, இயங்கும் படிக்கட்டுகள், சாய்வு தளங்கள் ஆகியவையும் கலைஞர் நூலகத்தில் அமைக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகமும், வள்ளுவர்கோட்டமும்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தை மறுசீரமைக்கும் பணிகளுக்காக 34 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பாராட்டப்படும் தெற்காசியாவின் மிகப்பெரிய மற்றும் சர்வதேச தரத்திலான நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம், சாதாரண மக்களும் ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி அண்ணா நூலக கட்டடத்தினை புனரமைத்து புதுப்பொலிவூட்டி மறுசீரமைக்கும் பணிகளுக்கு 34.88 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் வளாகத்தில் பழுதுபார்த்தல், இயற்கை வனப்புடைய நில அமைப்பு மற்றும் மின் பணிகள் உள்ளிட்ட இதர வசதிகள் 33.66 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீழடி அருங்காட்சியகம்

உள்ளூர் மக்களின் கலை மற்றும் கைவினைத் திறமைகளை வெளிப்படுத்தும் தோற்றத்துடன் கீழடி அருங்காட்சியகம் அமைய உள்ளதாக பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் 31 ஆயிரத்து 919 சதுர அடி பரப்பளவில் 11 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் கல், உலோகம், மணிகள், தந்தப் பொருட்கள், விலங்குகள் குறித்த தொல்பொருட்கள், மற்றும் சுடுமண் பானைகள் காட்சிபடுத்த உள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகழ்வைப்பக கட்டடங்களின் வடிவமைப்பு அப்பகுதியில் உள்ள வீடுகளின் கலைநயத்தை பறைசாற்றும் விதமாக முற்றம், தாழ்வாரம் மற்றும் மண்டபங்களுடன் அமைக்கப்பட இருப்பதாகவும், உள்ளூர் மக்களின் கலை மற்றும் கைவின திறமைகளை வெளிப்படுத்தும் தோற்றத்துடன் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட இருப்பதாகவும் பொதுப்பணித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் கிராவுக்கு நினைவிடம்

தமிழ் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவகம் 1 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்படவுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார அலுவல வளாகத்தில் 277 சதுர மீட்டர் அளவில் நூலகத்துடன் கூடிய நினைவகம் அமைக்கபடவுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Esakki Raja
First published:

Tags: Keezhadi, TN Assembly