முருகன் என்றால் என் முகம்தான் மக்களின் நினைவுக்கு வரும் - சீமான்

முருகன் என்றால் என் முகம்தான் மக்களின் நினைவுக்கு வரும் - சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

வட இந்தியாவில் மதத்தை வைத்து அரசியல் செய்வது போல தமிழகத்தில் அரசியல் செய்ய பாஜகவினர் நினைக்கின்றனர் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் பாஜக-வின் வேல் அரசியல் செல்லுபடியாகாது என்றும், முருகா என்றால் சீமான் முகம் தான் மக்களின் நினைவுக்கு வருமென்றும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

  சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஓபிசி இட ஒதுக்கீடு, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து ஒரு மாதம் திசை திருப்பவே வேல் யாத்திரையை பாஜக கையில் எடுத்திருப்பதாக சாடினார்.

  ”தமிழ்நாடு நாளையும், முருகனையும் கொண்டாடும் வகையில், கோவை சின்ன வேடம்பட்டி கவுமார மடலாயத்தில் இருந்து மருதமலை வரை நாம் தமிழர் கட்சியினர் வேல் பயணம் நடத்தினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில், தமிழ்நாடு தனிக்கொடியை ஏற்ற முயன்ற நாம் தமிழர் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். தைப்பூசத்திற்கும், தமிழ்நாடு உருவாகிய நாளைக்கும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும்” என்றார்.

  மேலும் பேசிய அவர், ”எந்த நாட்டில் ரஜினிக்கு ஆதரவு இருக்கிறதோ அங்கு சென்று அவரை கட்சி துவங்க சொல்லுங்கள். எனக்கும்தான் உலகம் முழுவதும் கட்சி உள்ளது. என் கட்சி இல்லாத நாடே இல்லை.  அயோத்தியில் ராமர் வைத்து அரசியல் செய்தது போல, கேரளாவில் ஐயப்பனை அரசியல் செய்யலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அது தோற்றுவிட்டது. ஓபிசி இட ஒதுக்கீடு, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து ஒரு மாதம் திசை திருப்ப பாஜகவினர் வேல் யாத்திரை செல்ல உள்ளனர். பல்வேறு பிரச்சனைகளை மூடி மறைக்கவே இந்த வேல் யாத்திரையை நடத்துகின்றனர். வேலை வைத்து இவர்கள் நடத்தும் அரசியல் செல்லாது.” என்றார்.

  தொடர்ந்து பேசிய சீமான், “வட இந்தியாவில் மதத்தை வைத்து அரசியல் செய்வது போல தமிழகத்தில் அரசியல் செய்ய நினைக்கின்றனர். ஆனால் அதை நடத்த நாங்கள் விடமாட்டோம். வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும். பாகிஸ்தான் பக்கத்து நாடு, ஜெய் ஸ்ரீராம் கோஷம் இதை தவிர அவர்களுக்கு எந்த கொள்கையும் கோட்பாடும் இல்லை” என்று கூறினார்.
  Published by:Rizwan
  First published:

  சிறந்த கதைகள்