• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மகள் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோல் கேட்டு முருகன் மனு!

மகள் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோல் கேட்டு முருகன் மனு!

முருகன்

முருகன்

டந்த ஜூலை மாதம் 25-ந்தேதி பரோலில் வந்த நளினி வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் முருகன் அவரது மகள் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஒரு மாதம் பரோல் கேட்டு சிறைத்துறைக்கு விண்ணப்பித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துவருகின்றனர். நளினி, முருகன் தம்பதியின் மகள் ஹிர்தாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது.

    திருமண ஏற்பாடுகளை மேற்பகொள்வதற்காக, முன்னரே நளினி பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் நளினி ஒரு மாதம் பரோல் வழங்கி அனுமதித்திருந்தது. கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி பரோலில் வந்த நளினி வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி உள்ளார்.

    கடந்த மாதம் 25-ந்தேதியுடன் நளினியின் ஒருமாத கால பரோல் முடிவடைய இருந்தது. இதற்கிடையே அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் பேரில் மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில் முருகன் மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒரு மாதம் பரோல் கேட்டு சிறைத்துறைக்கு மனு அனுப்பியுள்ளார்.

    சிறையிலிருக்கும் முருகன் தீவிர ஆன்மீகத்தில் இறங்கியுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்னர், அவர் ஜீவ சமாதி அடைவதற்கு அனுமதி கோரி கடிதம் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: