ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திண்டுக்கல் மாவட்டத்தில் பகீர்...12 மணி நேரத்தில் 3 கொலைகள்.. நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தில் பகீர்...12 மணி நேரத்தில் 3 கொலைகள்.. நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தில் பகீர்...12 மணி நேரத்தில் 3 கொலைகள்.. நடந்தது என்ன?

Dindigul | திண்டுக்கல் மாவட்டத்தில் வரிசையாக நடந்த தொடர் கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...12 மணி நேரத்தில் 3 கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள கதிரையன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான சிவா. பாலிடெக்னிக் முடித்து,  காவலர் தேர்வுக்கு பயிற்சி எடுத்து வருகிறார். சனிக்கிழமை அதிகாலை கதிரையன்குளத்தில் உள்ள  விநாயகர் கோயிலில் தூங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

  ஊருக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்று  கூறி தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கு சிவா புகார் கொடுத்துள்ளார். இதனால்  சிவாவிற்கும் அதே ஊரைச் சேர்ந்த 12வது வார்டு உறுப்பினரான முத்துக்குமாருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சிவா மற்றும் அவரது சகோதரர் சிவக்குமாரை கத்தியை வைத்து குத்த முயற்சித்தார் முத்துக்குமார்.

  இதனை அறிந்த சிவாவும். சிவக்குமாரும் திருப்பி தாக்கியதில் முத்துக்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சனிக்கிழமை இரவு ஊர் மத்தியில் உள்ள விநாயகர் கோவிலில் சக உறவினர்களுடன் சிவா படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்மகும்பல் சிவாவை வெட்டி படுகொலை செய்தனர். முத்துக்குமார்தான் கூலிப்படையை ஏவி சிவாவை கொலை செய்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  திண்டுக்கல்லில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தம்பியை அண்ணனே கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலை முருகபவனம் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான பிரபாகரன் . பெயிண்டர் வேலை செய்தார். இவரது வீட்டின் அருகிலேயே பெரியப்பா மகனான விஜய் வெள்ளைச்சாமி வசித்து வருகிறார். விஜய் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளன

  கடந்த மாதம் வீட்டருகே உள்ள மோட்டார் உதிரிபாக கடையில் பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களை திருடுபோனது இந்த வழக்கில் விஜயை போலீஸார் கைது செய்தனர். தான் கைதானதற்கு தம்பி பிரபாகரன் தான் காரணம், அவர்தான் போலீசாருக்கு உளவு சொல்லியதாக விஜய் நினைத்துள்ளார்.

  இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பிரபாகரனை, விஜய் வெள்ளைச்சாமி கழுத்தை அறுத்து கொலை செய்தார். சத்தம் கேட்டு வந்த பிரபாகரனின் தாய் முனியம்மாளை தள்ளி விட்டு விட்டு விஜய் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

  சொத்து தகராறில் தம்பியை அண்ணனே வெட்டிக் கொன்ற சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Read More : இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்குவதில் மோதல்! கத்திக்குத்து வரை சென்ற மாணவர்கள்...

  பழனி அருகே உள்ள புளியமரத்துசெட் பகுதியை சேர்ந்தவர்கள் 55 வயதான ஈஸ்வரன், 50 வயதான மகேந்திரன். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வரும்  இவர்களுக்கு சொந்தமாக தோட்டம் ஒன்று உள்ளது. கடந்த சில மாதங்களாக ஈஸ்வரனுக்கும், மகேந்திரனுக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக  அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

  அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே வியாழக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அண்ணன் ஈஸ்வரன் நொங்கு வெட்டீம் அரிவாளால் தம்பி மகேந்திரனை,  சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் பரிதாபமாக உயிரழந்தார். தப்பிஓடி தலைமறைவாக இருக்கும் ஈஸ்வரனை போலீஸார் தேடி வருகின்றனர்.சொத்து தகராறில் அண்ணனே, தம்பியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Dindigul, Tamilnadu