கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்று கிணற்றில் வீசிய சம்பவம்: மனைவி, கள்ளக்காதலன் கைது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்று கிணற்றில் வீசிய சம்பவம்: மனைவி, கள்ளக்காதலன் கைது

மாதிரிப்படம்.

சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று பயன்பாடற்ற கிணற்றில் வீசியுள்ளனர்.

  • Share this:
கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தன் கணவரைக் கொன்று சடலத்தைச் சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய சம்பவத்தில் கள்ளக்காதலனுடன் மனைவியும் சிக்கி கைது செய்யப்பட்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி தண்டபாணி. இவரது மனைவிதான் தேவி, 35. இவர் தன் கணவரைக் காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் விசாரித்து வந்தாலும் புகார் கொடுத்த தேவி மீதும் ஒரு கண் வைத்திருந்தனர்.

மேலும் அவரும் முன்னுக்குப் பின் முரணாக போலீசாரிடம் தெரிவிக்க தேவி மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்து இவரைக் கண்காணித்தனர். அப்போதுதான் தேவிக்கு தாராபுரத்தைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. பனியன் தொழிற்சாலையில் வேலை செய்யும் இவர் பெயர் அபிஷேக் (20). இவரையும் போலீசார் விசாரித்தனர்.

அப்போதுதான் கிடுக்கிப் பிடி விசாரணையில் இருவரும் தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தண்டபாணியை கொலை செய்து சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசியது தெரியவந்தது.

இதனையடுத்து தாராபுரம் தீயணைப்புப் படையினர் சடலத்தைக் கைப்பற்றி பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவி, அபிஷேக் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்ததில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக தண்டபாணி, தேவி திருமணம் நடந்துள்ளது. அங்கு வியாபாரம் செய்த போதுதான் அபிஷேக்குடன் தேவிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது கணவனுக்கு அரசல்புரசலாகத் தெரியவந்தது எப்படியோ தேவிக்கும் புரிந்தது, இதனையடுத்து கணவரைத் தீர்த்துக் கட்ட திட்டம்போட்டுள்ளார். இந்நிலையில் கீரனூருக்கு அபிஷேக்கை வரவைத்து, தேவி தன் கணவனுக்கு அளவுக்கதிகமாக மது கொடுத்துள்ளார்.

அதன் பிறகு தண்டபாணியின் முகத்தில் பாலித்தீன் பையைச் சுற்றி மூச்சுத்திணற வைத்து கொலை செய்துள்ளனர். சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று பயன்பாடற்ற கிணற்றில் வீசியுள்ளனர். இதனையடுத்து மனைவி புகார் கொடுத்து கள்ளக்காதலனுடன் சிக்கிக் கொண்டதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
Published by:Muthukumar
First published: