• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுக எம்.பிக்கள் மீது கொலை வழக்கு பதிவு.. ஆளுநரை சந்தித்தது குறித்து அண்ணாமலை விளக்கம்!

திமுக எம்.பிக்கள் மீது கொலை வழக்கு பதிவு.. ஆளுநரை சந்தித்தது குறித்து அண்ணாமலை விளக்கம்!

திமுக எம்.பிக்கள் மீது கொலை வழக்கு பதிவு.. ஆளுநரை சந்தித்தது குறித்து அண்ணாமலை விளக்கம்!

திமுக எம்.பிக்கள் மீது கொலை வழக்கு பதிவு.. ஆளுநரை சந்தித்தது குறித்து அண்ணாமலை விளக்கம்!

தமிழ்நாட்டில் அராஜகம் தலை தூக்கத் தொடங்கியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

  • Share this:
    சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்தார். இதைத்தொடர்ந்து, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ஆளுனருடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தார்.

    திமுக எம்.பிக்கள் மீது கொலை வழக்கு பதிவு.. ஆளுநரை சந்தித்தது குறித்து அண்ணாமலை விளக்கம்!


    அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, அராஜகம் தலைதூக்க தொடங்கியுள்ளது. திமுகவைச் சேர்ந்த கடலூர் மற்றும் திருநெல்வேலி எம்.பிக்கள் மீது கொலை புகார் உள்ளது. அது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர் பேசவில்லை என்பதால், ஆளுநரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்.

    கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி இடைத்தேர்தலில் பாஜகவைச் சேர்ந்தவர் ஒரு வாக்கு பெற்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கோவை குருடம்பாளையம் ஊராட்சி தேர்தலில் ஒரு வாக்கு பெற்றவர் பாஜக வேட்பாளர் அல்ல, தாமரை சின்னத்தில் அவர் போட்டியிடவில்லை, அவர் சுயேட்சை வேட்பாளர் மட்டுமே என விளக்கமளித்தார். ஆனால் ஊடகங்கள் அவர் பாஜக வேட்பாளர் என பொய்யாக கூறுவதாகவும் தெரிவித்தார்.

    2024க்குள் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்படும் என பேசியது, திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கிறீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆம்.. எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

    ஊராட்சி தேர்தலில் பல இடங்களில் முறைகேடுகள் நடந்ததாக வரும் புகார் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அது வழக்கமாக திமுக ஆட்சியில் நடைபெறும் ஒன்றுதான் எனவும், அது குறித்து நாளை தெரியவரும் எனவும் அண்ணாமலை கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: