குடிபோதையில் இருந்தவரின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற வாலிபர்!

நள்ளிரவுவில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குடிபோதையில் இருந்தவரின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற வாலிபர்!
நள்ளிரவுவில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
  • Share this:
கடலூர் மாவட்டத்தில் நள்ளிரவுவில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் வன்னியர்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் டேனியல். நேற்று இரவு 12 மணியளவில் புதுச்சேரி கன்னியகோவில் பகுதியில் உள்ள சாராயக் கடையில் மது அருந்திவிட்டு அங்குள்ள மண்ணாதீஸ்வரர் கோவில் அருகே படுத்துள்ளார்.

அப்போது அங்கே ஒரு வாலிபர் வந்து அவரை எழுப்புகின்றார். தொடர்ந்து டேனியல் எழுந்து நிற்கின்றார். தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகின்றது.


இதையடுத்து, அந்த வாலிபர் கல்லை எடுத்து டேனியலின் தலையில் போட்டுள்ளார். இதனால் டேனியல் சமப்வ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

பிறகு, அங்கிருந்து வாலிபர் தப்பியோடி உள்ளார். அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். டேனியல் உடலைக் கைப்பற்றிய கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

Also see:
First published: March 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading