• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிவகங்கையில் அதிகரிக்கும் குற்றங்கள்; மாவட்ட காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் - கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் அதிகரிக்கும் குற்றங்கள்; மாவட்ட காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் - கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம், எம்.பி.,

கார்த்தி சிதம்பரம், எம்.பி.,

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் காவல்துறை மீது இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

  • Share this:
சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்திக் சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளையால் மாவட்ட காவல்துறை மீது நம்பிக்கை குறைந்து விட்டது. கடந்த 14-ம் தேதி காளையார்கோவில் அருகே  முடுக்கூரணி கிராமத்தில் ராணுவ வீரரின் மனைவி மற்றும் தாய் ஆகியோர் கொலை செய்யபட்டு கிடந்தனர். அத்துடன் அவர்களது வீடும் கொள்ளை அடிக்கபட்டது.

அதன் பின் கடந்த மாதம் 22-ம் தேதி சிங்கம்புணரி அருகே மருதிபட்டியில்  முன்னாள் விமானப்படை  வீரர் விட்டில் கொள்ளை அடிக்கப்பட்டது. நான் நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு சென்று விசாரித்து வந்தும், இந்த சம்பங்கள் குறித்து தமிழக டிஜிபி திரிபாதியிடம் இரண்டு முறை புகார் கொடுத்தும், அப்போது பொறுப்பில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும் இதுவரை இச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யமால் இருப்பது வேதனை அளிக்கிறது.

மேலும் படிக்க...புதுச்சேரியில் படகு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

சிவகங்கை தொகுயின் மக்கள் பிரதிநிதியாக மாவட்ட மக்களின் பாதுகாப்புக்காக நான் வைத்த கோரிக்கையை தமிழக அரசும், காவல்துறையும் செவி சாய்க்காமல் செயல்படுவது மாவட்டத்தில் உள்ள மக்களுக்கும் எனக்கும் மிகப்பெரிய ஏமாற்றமே. இச்சம்பவங்களில் ஈடுபட்ட  குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் உள்ளது. எனக்கும் மாவட்ட மக்களுக்கும் காவல்துறையின் மீது இருந்த நம்பிக்கை குறைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: