முரசொலி வைத்திருந்தால் மனிதன் என பொருள்..! ரஜினிக்கு முரசொலி நாளிதழ் பதிலடி

சாதி, மதம் பேதம் பார்க்காதவன், ஆண்டான் - அடிமைக்கு எதிரானவன் என்று பொருள்.

முரசொலி வைத்திருந்தால் மனிதன் என பொருள்..! ரஜினிக்கு முரசொலி நாளிதழ் பதிலடி
சாதி, மதம் பேதம் பார்க்காதவன், ஆண்டான் - அடிமைக்கு எதிரானவன் என்று பொருள்.
  • Share this:
முரசொலி நாளிதழை வைத்திருந்தால் தமிழன், திராவிட இயக்கத் தமிழன், மனிதன் என பொருள் என்று முரசொலி நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “முரசொலி வைத்திருந்தால் திமுக-வினர் என்பார்கள், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்“ என்று கூறியிருந்தார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் முரசொலி நாளிதழில் இன்று வெளியாகி உள்ள தலையங்கத்தில், “ முரசொலி வைத்திருந்தால் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற பேதமற்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவன் என்று பொருள். 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற சமத்துவ எண்ணம் கொண்டவன் என்று பொருள்.


சாதி, மதம் பேதம் பார்க்காதவன், ஆண்டான் - அடிமைக்கு எதிரானவன் என்று பொருள். ‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்பவன். ஒரு பெண்ணுலகு உருவாக்கும் போராட்டத்தில் தன் பெயரை இணைத்துவிட்ட 'உடன்பிறப்பு“ என்று பொருள் என்று ரஜினி பதிலடி கொடுக்கும் விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
First published: January 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்