தமிழிசையை விமர்சித்து முரசொலியில் கட்டுரை!

தமிழிசை சௌந்தர்ராஜன்

திமுக தனது அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுத்து கூட்டணியில் சேரவில்லை என்று முரசொலி நாளிதழில் குறிப்பிடப்பத்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாஜகவுடன் திமுக பேசி வருவதாக கூறிய தமிழிசை சவுந்தரராஜனை விமர்சித்து, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது.

"அடுக்குமொழி அம்மாளு, தமிழிசை வெட்கப்பட வேண்டாமா" என்ற தலைப்பில் அந்த கட்டுரை வெளியாகியுள்ளது. பாஜகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் என தமிழிசை கூறுவதில் இருந்தே இவை அப்பட்டமான பொய் என்பது தெரியவில்லையா என்றும் தமிழகத்தின் அரசியல் கட்சி தமது கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்துவது, மாநில தலைவரான தமிழிசைக்கே தகவலாகத்தான் தெரியும் என்றால் அது வெட்கக்கேடு அல்லவா என்றும் அதில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மதவாத இயக்கமான பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என அரைகுறை அறிவுகொண்ட அரசியல்வாதிகள் கேள்வி எழுப்புவதாகவும், திமுக அதன் அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுத்து கூட்டணியில் சேரவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மாறாக, பாஜகவே தனது அடிப்படை கொள்கைகளை சமரசம் செய்து கொண்டு, குறைந்தபட்ச செயல்திட்டங்களுடன் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதாகவும், அந்த தேர்தலில் பாஜக தனக்கென ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை என்றும் முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Also see... காங்கிரசில் இணைய விருப்பம் தெரிவித்த தமிழிசை -செல்வப்பெருந்தகை

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: