முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ’தாவல் திலகம்’ குஷ்புவுக்கு நாவடக்கம் தேவை.. முரசொலி விமர்சனம்..!

’தாவல் திலகம்’ குஷ்புவுக்கு நாவடக்கம் தேவை.. முரசொலி விமர்சனம்..!

குஷ்பு - முரசொலி

குஷ்பு - முரசொலி

இனி குஷ்பு புரிந்து கொள்ளுவார் என எண்ணுவதாகவும் பதிவு.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய குஷ்புவின் பேச்சை முரசொலி விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக முரசொலி சிலந்தி பக்கத்தில் வந்த கட்டுரையில், பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தகவல் திலகம் குஷ்பு ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தை பற்றி பேசாமல், தனது வாய்த்துடுக்கை காண்பித்துள்ளார்.

குஷ்பு அரசியலில் ஈடுபட்ட குறைந்த காலத்தில் நிறைய கட்சிகளுக்கு தாவியதால் அவருக்கு தாவல் திலகம் என்ற பட்டம் பொருத்தமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

குஷ்பு தேவையில்லாமல் தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் குறித்து பேசி வீண் வம்பை விலைக்கு வாங்கியுள்ளார்.  முதலமைச்சர் தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை, எழுதி கொடுப்பதைதான் அவர் படிப்பது வழக்கம் என தேவையின்றி பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது,

மின்கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது, பால்விலை உயர்வால் வயிறு எரிகிறது என துடிக்கிறார் என்றும், மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதமாதம் சகட்டுமேனிக்கு ஏற்றிய போதும், பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்தி கொண்டே இருந்த போதும் அதன் விளைவாலும், ஜிஎஸ்டி போன்ற ஒழுங்கு முறைப்படுத்தாத வரிவிதிப்பாலும், விண்முட்ட விலைவாசி ஏறியபோதெல்லாம் எரியாத வயிறு ஏழைகளை பாதிக்காத வகையில் பால் விலையை ஏற்றி பால் முகவர்களுக்கு விலையை உயர்த்தியுள்ளதை கண்டு எரிகிறதாம் என விமர்சித்துள்ளது.

ALSO READ | ரேஷன் கடைகளில் வருகிறது புதிய நடைமுறை : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

அதற்கு பெயர் வயிறு எரிவத்தல்ல, வயித்தெரிச்சல் என்றும், திமுக அரசு எந்த திட்டமிட்டாலும் ஏழை எளியவர் பாதிக்காத வகையில் போடுவதால் ஏற்பட்ட மன அரிப்பு என குறிப்பிட்டுள்ளனர்.

திமுக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்ட சில வார்த்தைகளுக்காக அவர் வருத்தம் தெரிவித்தும், வழக்கு அவர் மீது போடப்பட்ட பின்னும் அவர் பேசியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்கிற குஷ்பூ எச்.ராஜா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்பாரா? அவர் பேசியதற்காக அமித்ஷாவும், பிரதமர் மோடியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பு கேட்பாரா, அல்லது இனியாவது கேட்பாரா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.

குஷ்பு பேச்சை பொருட்படுத்த கூடாது என்று இருந்தோம், கொஞ்சம் அளவுக்கு மீறி வாய் நீளம் காட்ட தொடங்கி விட்டதால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதற்காக சிறிய விளக்கங்களை பதிவு செய்துள்ளதாகவும், இனி குஷ்பு புரிந்து கொண்டு நடப்பார் என எண்ணுவதாக குறிப்பிட்டுள்ளது.

First published:

Tags: Kushboo, Kushbu, Murasoli