தமிழகத்தில் நகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் பெண்களுக்கு 51 நகராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நகர்புறங்களுக்கான தேர்தல் பின்னர் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மாநகராட்சி மேயர், பதவியிடங்களுக்கான இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நகராட்சித் தலைவர் இடங்களுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் பெண்கள் ஆதி திராவிடர்கள், பெண்கள் பொதுப்பிரிவினர் உட்பட நகராட்சித் தலைவர்களுக்கான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மொத்தம் உள்ள 121 நகராட்சிகளில்,
பெண்கள் ( பழங்குடியினர்) - நீலகிரி மாவட்டம் கூடலூர்.
பெண்கள் (ஆதி திராவிடர்கள்) - ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, வால்பாறை, உதகமண்டலம், சங்கரன்கோயில், பேர்ணாம்பட்டு, குன்னூர்,பெரம்பலூர்.
ஆதி திராவிடர் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள்:
நெல்லிக்குப்பம், அரக்கோணம், நெல்லியாலம், ஆத்தூர், திருவேற்காடு, நரசிங்கபுரம், கூத்தநல்லூர், மறைமலைநகர்.
51 நகராட்சித் தலைவர் இடங்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.