மெரினா கடற்கரையில் மாநகராட்சி சார்பில் அமைத்து கொடுக்கப்பட உள்ள கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகையாக 5 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரையில் நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 27 கோடியே 4 லட்சம் செலவில் 900 தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சியே அமைத்து கொடுக்க இருப்பதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் 66 லட்சம் ரூபாய் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தள்ளுவண்டி கடைகளுக்கு மாத வாடகையாக 100 ரூபாய் வசூலிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இன்றைய சூழலில் 100 ரூபாய் வாடகை ஏற்புடையதல்ல என தெரிவித்த நீதிபதிகள், குறைபட்ச வாடகையாக 5 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க உத்தரவிட்டனர்.
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.