நிதி நெருக்கடியால் காலிப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை, நிதி நிலைமை சீரானதும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தேவையான இடங்களில் உள்ள காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் ஒன்பதாவது மன்னராகத் திகழ்ந்த ராஜ ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா நேற்று முதல் வருகின்ற 26ம் தேதி வரை கொண்டாடப்படும் நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பத்தாண்டு காலமாக நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளையும் அப்போதைய அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை, கடந்த ஆண்டு தமிழக முதல்வர், கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த ஆண்டும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதனைக் கொண்டு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் அவசர பணிகள் மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது தமிழக அரசு மிகப் பெரிய நிதி சுமையில் உள்ளது, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிகிறது,
இருந்தபோதிலும் தமிழக அரசு மிகப்பெரிய நிதி சுமையால் உள்ளதால் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
நிதி சுமை சீரானதும் அது பற்றி பரிசீலனை செய்து தேவையான இடங்களில் பணியாளர் நிரப்பப்படும், இதற்கிடையில் தேவையான இடங்களில் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப கருத்துரிமை கோரப்பட்டுள்ளது, தமிழக முதலமைச்சரின் அனுமதி பெற்று தேவைக்கு ஏற்ப அந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் கே என் நேரு கூறுகையில், புதுக்கோட்டையில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு காணும் வகையில் 122 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது, புதுக்கோட்டை நகரின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் 690 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஓரிரு ஆண்டுகளில் நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
செய்தியாளர் - ர.ரியாஸ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: K.N.Nehru