நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்
திமுக சார்பில் போட்டியிடும் பேரூராட்சி மன்றத் தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற்றது. இதில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றனர். குறிப்பாக 21 மாநகராட்சிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது.
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் பதவிகள் விவகாரம் தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தி.மு.க மூத்த தலைவர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்த நிலையில் மாநகராட்சி மேயர், துணை மேயர் வேட்பாளர்களை திமுக இன்று வெளியிட்டது. இதில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒரு துணை மேயர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் பேரூராட்சி மன்றத் தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விடுப்பட்ட பேருராட்சியை சேர்ந்த கழக வேட்பாளர்கள் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக சார்பில் போட்டியிடும் பேரூராட்சி மன்றத் தலைவர்கள்
திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பேரூராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்கள் நாளை நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.