தமிழகம் திரும்பும் சசிகலா... சென்னையில் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி கிடையாது - மாநகர ஆணையர் பிரகாஷ்

தமிழகம் திரும்பும் சசிகலா... சென்னையில் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி கிடையாது - மாநகர ஆணையர் பிரகாஷ்

மாநகர ஆணையர் பிரகாஷ்

சென்னையில் பேனர் வைக்கக்கூடாது என்பது நீதிமன்ற உத்தரவு. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னையில் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி கிடையாது. மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் புதிய வகை ஸ்மார்ட் சைக்கிள்களை அறிமுகப்படுத்தி வைத்த ஆணையர் பிரகாஷிடம், சசிகலாவை வரவேற்க பல இடங்களில் பேனர் வைக்க முயற்சிகள் நடந்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரகாஷ் சென்னையில் பேனர் வைக்கக்கூடாது என்பது நீதிமன்ற உத்தரவு. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கடும் ஸ்மார்ட் கடைகள் டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது. அதுகுறித்து பதிலளித்த பிரகாஷ், டெண்டர் அனைத்தும் வெளிப்படையாகவே நடந்ததாகவும் அதில் முறைகேடு ஏதும் இல்லை என்றும் பேசினார்.
Published by:Sankaravadivoo G
First published: