வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...! எப்படி சரிபார்ப்பது...?

வாக்காளர் பட்டியல் (கோப்புப் படம்)
- News18
- Last Updated: December 23, 2019, 12:32 PM IST
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ரிப்பன் மாளிகையில் வெளியிட்டார்.
வரைவு வாக்காளர் பட்டியல் படி சென்னையில் 38,88,673 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 19,15,718 ஆண் வாக்காளர்கள், 19,71,966 பெண் வாக்காளர்கள் மற்றும் 989 இதர வாக்காளர்கள் உள்ளனர்.
ஜனவரி 1-ம் தேதி 2020 அன்று 18 வயது நிரம்புகிறவர்கள் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பட்டியலில் இடம் பெறலாம். ஜனவரி 22-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க படிவம், பெயர் நீக்க படிவம், திருத்தம் செய்ய படிவம் , சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு முகவரி மாற்ற படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக இதனை செய்யலாம் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தவிர ஜனவரி 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் திருத்தம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை மாவட்டத்தில் 3754 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன. கூவம் கரையோரத்தில் இருந்த 14,000 பேரில் 11,000 பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதே போன்று அடையாறு கரையோரத்தில் இருந்து 5,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களின் பெயர்கள் புதிய வசிப்பிடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.Also see...
வரைவு வாக்காளர் பட்டியல் படி சென்னையில் 38,88,673 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 19,15,718 ஆண் வாக்காளர்கள், 19,71,966 பெண் வாக்காளர்கள் மற்றும் 989 இதர வாக்காளர்கள் உள்ளனர்.
ஜனவரி 1-ம் தேதி 2020 அன்று 18 வயது நிரம்புகிறவர்கள் அல்லது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பட்டியலில் இடம் பெறலாம். ஜனவரி 22-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க படிவம், பெயர் நீக்க படிவம், திருத்தம் செய்ய படிவம் , சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு முகவரி மாற்ற படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக இதனை செய்யலாம் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.