முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தைச் சேர்ந்த கள்ளநோட்டு கும்பல் தலைவன் கைது: சிக்கியது எப்படி..?

தமிழகத்தைச் சேர்ந்த கள்ளநோட்டு கும்பல் தலைவன் கைது: சிக்கியது எப்படி..?

கலர் ஜெராக்ஸ் இயந்திரத்தை தாண்டி, வேறு எதாவது நவீனமான இயந்திரங்களை இக்கும்பல் பயன்படுத்தியதா? உதவி செய்தவர்கள் யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். 

கலர் ஜெராக்ஸ் இயந்திரத்தை தாண்டி, வேறு எதாவது நவீனமான இயந்திரங்களை இக்கும்பல் பயன்படுத்தியதா? உதவி செய்தவர்கள் யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். 

கலர் ஜெராக்ஸ் இயந்திரத்தை தாண்டி, வேறு எதாவது நவீனமான இயந்திரங்களை இக்கும்பல் பயன்படுத்தியதா? உதவி செய்தவர்கள் யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆம்பூரைச் சேர்ந்த கள்ளநோட்டுக் கும்பல் தலைவனை மும்பை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். தமிழக போலீசாரும், மும்பை போலீசாரும் கூட்டாக நடத்திய சோதனையில் ஏழரை லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் சிக்கியது.

ஆம்பூரில் அச்சடிக்கப்பட்டு, மும்பையில் விநியோகம் செய்த இந்த கள்ளநோட்டுக் கும்பல் சிக்கியது எப்படி?

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட்டில், கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட பாஸ்கர் என்பவரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கடந்த 3-ஆம் தேதி கைது செய்தனர்.

விசாரணையில், பாஸ்கர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் உள்ளூர் கும்பலிடம் இருந்து கள்ளநோட்டுக்களை வாங்கி விநியோகித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவைப் பெற்று, மும்பை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ் பாபு ராவ் தலைமையிலான போலீசார் வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள பாஸ்கரின் வீட்டில் சோதனையிட்டனர்.

பாஸ்கர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவருக்கு கள்ள நோட்டுக்களை கொடுத்து வந்த சரவணன் என்பவரையும் மும்பை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியில் வசித்து வரும் சரவணனின் வீட்டில் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் மும்பை போலீசார் சோதனையிட்டனர். ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், சரவணனின் வீட்டிலிருந்து 200 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ஆய்வு செய்து பார்த்ததில், 7 லட்சத்து 55, 700 ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

15 உண்மையான ரூபாய் நோட்டுக்கள், ஒரு கலர் ஜெராக்ஸ் இயந்திரம் - இவற்றை வைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான கள்ள நோட்டுக்களை சரவணன் அச்சடித்தது தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள்

விசாரணையில், சரவணனிடம் இருந்து பெறும் கள்ளநோட்டை, பாஸ்கர் மும்பையில் உள்ள கும்பலிடம் ஷேர் செய்துள்ளார். அதில்வரும் பணத்தைக்கொண்டு உல்லாச பார்ட்டிகளில் பாஸ்கர் பங்கேற்று வந்துள்ளார்.

உள்ளூரில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில், இக்கும்பல் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மும்பையை தேர்ந்தெடுத்துள்ளது.

மேலும் கலர் ஜெராக்ஸ் இயந்திரத்தை தாண்டி, வேறு எதாவது நவீனமான இயந்திரங்களை இக்கும்பல் பயன்படுத்தியதா? உதவி செய்தவர்கள் யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.

ஆம்பூரில் கள்ளநோட்டுக்களை அச்சடித்து, ரயிலில் மூலம் மும்பைக்கு எடுத்துச்சென்று சிக்கிய இக்கும்பலால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also see...

First published:

Tags: Fake Note