அரசு மருத்துவமனைகளில் பணி செய்ய உயர் சிறப்பு மருத்துவர்களிடையே குறையும் ஆர்வம்!

மாதிரிப் படம்

உதாரணமாக இரைப்பை குடல் சிறப்பு சிகிச்சைக்கான படிப்பில் 2017 ஆம் ஆண்டு 16 இடங்கள் இருந்தன. இதில் கல்வி பயின்றவர்களில் இருவர் மட்டுமே தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர்.

  • Share this:
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகள் பயில்வோரிடம் படிப்பு முடித்த பின்னர் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய ஆர்வம் குறைந்து வருகிறது.

இந்தியாவில் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மருத்துவ சிகிச்சைகள் செய்வதற்காக பலர் தமிழகம் வந்து செல்வது உண்டு.ஆனால், வருங்காலத்தில் இந்த சிறப்பை தமிழகம் தக்க வைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் மாநிலத்துக்கான இட ஒதுக்கீடு இல்லாததால் வெளிமாநிலத்தவர்கள் பலரே தமிழகத்தில் கல்வி பயில்கின்றனர். விதிகள் படி தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படித்தவர்கள் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும். ஆனால், அவர்கள் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய விரும்புவதில்லை.

நியூஸ்18க்கு பிரத்யேகமாக கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி,
2017-2020 மற்றும் 2018- 2021ம் ஆண்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளை முடித்தவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 30ம் தேதி நடைபெற்றது. அதில் non-service ( அதாவது அரசு மருத்துவர்கள் அல்லாதவர்கள் மற்றும் வெளிமாநிலத்தவர்கள்) 301 பேர் பங்கேற்றனர். அதில் 89 பேர் மட்டுமே அரசு பணிகளில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.கலந்தாய்வில் பங்கேற்ற 33 அரசு மருத்துவர்களில் 30 பேர் பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: விரைவில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு: வங்கிகள் மும்முரம்!


உச்சநீதிமன்ற உத்தரவின் படி சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் சாதிவாரி இட ஒதுக்கீடு அல்லது மாநிலத்துக்கான இட ஒதுக்கீடு அல்லது அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடு என எந்த விதமான இட ஒதுக்கீடும் கிடையாது.

சாமிநாதன் - அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர்


இதுகுறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் சாமிநாதனிடம் கேட்ட போது " 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு மூலமாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது . அதற்கான கலந்தாய்வை மத்திய அரசே நடத்துகிறது. இந்த படிப்புகளில் கடந்த நான்கு ஆண்டுகளாக சேரும் மாணவர்களில் 70 முதல் 80 சதவீதம் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் படிப்பு முடித்த பிறகு தமிழக அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற விதியை பின்பற்றுவதில்லை. இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்பு சிகிச்சை முடித்த மருத்துவர்கள்  இல்லாத நிலை ஏற்படலாம்" என்கிறார்.

மேலும் படிக்க: புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிட விவகாரம் : ஓ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் - இ.பரந்தாமன்


உதாரணமாக இரைப்பை குடல் சிறப்பு சிகிச்சைக்கான படிப்பில் 2017 ஆம் ஆண்டு 16 இடங்கள் இருந்தன. இதில் ஒருவர் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர் அவரும் அரசு பணியில் இல்லாதவர். இந்த 16 பேரில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மாணவரும் வெளிமாநிலத்தவர் ஒருவர் மட்டுமே தமிழக அரசு பணியில் சேர்ந்துள்ளனர். மற்றவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.

2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில்  சிறுநீரக படிப்பில் 19 இடங்கள் இருந்தன. இதில் ஒருவர்  அரசு மருத்துவர் மற்றொருவர் தமிழ்நாட்டை சேர்ந்த அரசு பணியில் இல்லாதவர். இவர்கள் மட்டுமே அரசு பணியில் சேர்ந்துள்ளனர்.

இதுபோன்ற சூழலை தவிர்ப்பதற்கு தமிழக அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசாணை 462ஐ 2020ல் வெளியிட்டது. அந்த அரசாணையை அமல்படுத்த தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க செயலாளர் மருத்துவர் ராமலிங்கம் தெரிவிக்கிறார்.

மருத்துவர் ராமலிங்கம்- அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க செயலாளர்


"அரசாணை 462 ஐ எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், அரசாணையை 2020ல் அமல்படுத்த முடியாது என்றும் அடுத்த ஆண்டில் என்ன செய்வது என்பது குறித்து விவாதித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  எனவே இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் அரசு மருத்துவர்களுக்கு சாதமாக வாதாடி நல்ல தீர்ப்பை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முதுநிலை மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் உறுதி செய்வதற்கு சட்ட மசோதாவை தமிழக அரசு இந்த கூட்டத் தொடரிலேயே முன்மொழிய வேண்டும்" என்று மருத்துவர் ராமலிங்கம் கூறுகிறார்.

 
Published by:Murugesh M
First published: