• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முல்லை பெரியாறு விவகாரம்: கேரளாவை கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம்: ஓ.பன்னீர்செல்வம்

முல்லை பெரியாறு விவகாரம்: கேரளாவை கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம்: ஓ.பன்னீர்செல்வம்

முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    முல்லை பெரியாறு அணை தொடர்பாக மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 தென் மாவட்டங்களுக்கு மிகப் பெரிய ஆதாரமாக முல்லை பெரியாறு அணை உள்ளது.

    ஜெயலலிதா முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க ஜீவாதார உரிமையை பெற்று தந்துள்ளார். இந்த 142 அடி நீரை தேக்க கேரள அரசு பல்வேறு இடையூறுகள் செய்து வருகிறது. கேரள அரசின் இடையூறுகளை திமுக தலைமையிலான தமிழக அரசு கண்டும், காணாமலும் இருக்கிறது.

    முல்லை பெரியாறு அணையில் அதிமுக ஆட்சி காலத்தில் தொடர்ந்து 3 முறை 142 அடி நீர் தேக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சட்ட போராட்டம் நடத்தியது அதிமுக. முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. போராட்டம் நடைபெறும் இடம், நாள் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: