• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • "முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பொய் சொல்கிறார்களா கேரள அதிகாரிகள்?” உச்சநீதிமன்றம் கேள்வி

"முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பொய் சொல்கிறார்களா கேரள அதிகாரிகள்?” உச்சநீதிமன்றம் கேள்வி

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை

நீதிமன்ற உத்தரவை மீறி வாகன நிறுத்துமிடம் எதற்காக அமைக்கின்றீர்கள் , உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் அதனை பின்பற்ற கூட மாட்டீர்களா என கேரள அதிகாரிகளிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அதிகாரிகள் பொய் சொல்கிறார்களா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கேரள வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அப்பகுதியில் புதிய கட்டுமானம் கட்டப்படக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை மீறி கேரளா கட்டடம் கட்டுவதாக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தது.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை மீறி வாகன நிறுத்துமிடம் எதற்காக அமைக்கின்றீர்கள் , உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் அதனை பின்பற்ற கூட மாட்டீர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். வாகன கட்டுமானம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திலேயே பொய் சொல்கிறீர்களா என்றும் நீதிபதி கடிந்து கொண்டார்.

கார் பார்க்கிங் கட்டுமானங்கள் எதையும் செய்யவில்லை என கேரளா அரசு மறுப்பு தெரிவித்து அவர்களது தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் 15 நாட்களுக்குள் பிரமாண பத்திரமாக தங்களது பதிலை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டனர்.

Also watch: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஆசிரியர்கள், தோழிகள் என்ன சொல்கிறார்கள்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Anand Kumar
First published: