Home /News /tamil-nadu /

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்த்தப்படுமா: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்த்தப்படுமா: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

துரைமுருகன்

துரைமுருகன்

Mullai periyar dam: கேரள அரசுடன் நல்ல நட்பு முதல்வருக்கு இருப்பதால், அந்த நட்பை பயன்படுத்தி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

மேலும் படிக்கவும் ...
    முல்லை பெரியாறு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் ஆகியோருடன் கலந்தலோசித்து முடிவு செய்யப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டப்பேரவையில் கடந்த 6ம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை நீர்வளம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, உணவு, உயர் கல்வி, பள்ளி கல்வி, நெடுஞ்சாலை, பொதுப்பணி, வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகள் மீது விவாதம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, வார விடுமுறை காரணமாக கடந்த 4 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது

    4 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை மீண்டும் கூடியது.  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.  அப்போது, முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக காங்கிரஸ்,பாமக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    அப்போது பேசிய எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வது போன்ற பணிகளை செய்கிறது. இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு முழு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார். மேலும், கேரள அரசுடன் நல்ல நட்பு முதல்வருக்கு இருப்பதால், அந்த நட்பை பயன்படுத்தி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதையும் படிங்க: தமிழக மக்களுக்காக அவமானங்களையும், வலியையும் தாங்கிக் கொள்ள தயார்.. பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்..


    திமுக சார்பாக கம்பம் ராமகிருஷ்ணன் பேசும் போது, தமிழகத்தின் உரிமையை  நிலைநாட்ட வேண்டும் என்றார். இதை தொடர்ந்து பேசிய பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி, இருமாநில அரசின் நல்லுறை பேணும் வகையில் கேரளா அரசு செயல்படுவதோடு, 152 அடியாக முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    மேலும், காங்கிரஸ் கட்சி சார்பாக பேசிய செல்வ பெருந்தகை, முல்லை பெரியாறு விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். இதே போல சிபிஎம் சார்பாக நாகை மாலி, சிபிஐ தளி ராமசந்திரன் ஆகியோரும் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

    மேலும் படிக்க: TN Assembly | இனி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து விடுதிகளும் - அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அப்டேட்


    இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அனைத்து அணைகளின் பாதுகாப்பு மத்திய அரசு கொண்டு வரவுள்ள அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகிறது, மேலும், இச்சட்டம் வர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றார். ஆனால், இந்த சட்டத்தின் சரத்துகளின் படி அணையை பராமரிக்கும் பணி  நம்மிடம் கொடுத்துள்ளதாகவும், இது குறித்து  சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்ததாவும் கூறினார்.

    எனவே முல்லை பெரியாறு விவகாரத்தில் முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Duraimurugan, Mullai Periyar Dam, TN Assembly

    அடுத்த செய்தி