ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் நாளை முதல் பேருந்து சேவை - கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

சென்னையில் நாளை முதல் பேருந்து சேவை - கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியாளர்

பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியாளர்

சென்னையில் நாளை முதல் பேருந்து சேவை துவங்க உள்ள நிலையில் பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ஐந்து மாத காலத்திற்கு பிறகு சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்து சேவை துவக்கப்பட உள்ளது இதற்கான அறிவிப்பினை அரசு நேற்று வெளியிட்டது.

இதனையடுத்து இன்று சென்னை மாநகர போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பது, பேருந்துகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் பணிமனை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Also read... தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் புதிய கட்டணம் - எவ்வளவு உயர்கிறது?

சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 800 வழித்தடங்களில் 3500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நாளை எத்தனை பேருந்துகள் இயக்கப்படும் என்கிற விவரங்கள் இன்று வெளியாக உள்ளது.

அதே சமயம் நாளை பேருந்துகள் இயக்கப்படும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பயணிகள், பேருந்து நடத்துனர், ஓட்டுனர் ஆகியோர் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் , இருக்கையில் ஒருவர் மட்டுமே அமரவைக்கப்பட வேண்டும். பயணிகள் பேருந்தில் ஏறும் முன் கிருமி நாசினி கொடுக்கப்பட்டு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: MTC