திருநெல்வேலியில் தோனி.. குவிந்தது ரசிகர் பட்டாளம்

news18
Updated: August 4, 2018, 5:55 PM IST
திருநெல்வேலியில் தோனி.. குவிந்தது ரசிகர் பட்டாளம்
திருநெல்வேலியில் தோனி
news18
Updated: August 4, 2018, 5:55 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இன்று திருநெல்வேலிக்கு வந்துள்ளார்.

திருநெல்வேலியில் உள்ள தாழையூத்து பகுதியில் இந்தியா சிமெண்ட்ஸின் முதல் தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலைக்கு முதல்முறையாக மகேந்திர சிங் தோனி வருகை தருகிறார். இதற்காக திருநெல்வேலிக்கு வந்த தோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தொழிற்சாலையின் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தோனி திருநெல்வேலியில் இன்று நடைபெற இருக்கும் கோவை கிங்ஸுக்கும், மதுரை பேந்தர்ஸுக்கும் இடையிலான போட்டியை டாஸ் போட்டு தொடங்கிவைக்கிறார்.

தோனி தமிழகம் வந்திருப்பதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் அவருக்கு பாரம்பரிய உணவுகள் தயாரித்து கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் குண்டாறு அணைப்பகுதிக்கு மேல் உள்ள தனியார் அருவியில் தோனி குளிக்கச் சென்றபோது ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தமிழகம் வந்திருப்பதையொட்டி தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
First published: August 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...