ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

’நீங்கள் பெரியாருக்கு நன்றி சொல்லிவிட்டுதான் கையெழுத்திடவேண்டும்’ - அண்ணாமலையை சாடிய சு. வெங்கடேசன்!

’நீங்கள் பெரியாருக்கு நன்றி சொல்லிவிட்டுதான் கையெழுத்திடவேண்டும்’ - அண்ணாமலையை சாடிய சு. வெங்கடேசன்!

சு. வெங்கடேசன் - அண்ணாமலை

சு. வெங்கடேசன் - அண்ணாமலை

திருச்சியில் நடைபெற்ற மொழியுரிமை மாநாட்டில் பேசியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Tiruchirappalli | Tiruchirappalli

  நாத்திகர் பெரியாருக்கும், கிறிஸ்தவர் வீரமாமுனிவருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி கடன் பட்டுள்ளதாக நாடாளுமன்ற எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக திருச்சியில் நடைபெற்ற மொழியுரிமை மாநாட்டில் பேசிய அவர், கே. அண்ணாமலை ஒவ்வொரு முறை கையெழுத்திடும் போதும், தந்தை பெரியாருக்கும், வீரமாமுனிவருக்கும் நன்றி செலுத்திவிட்டுதான் கையெழுத்திட வேண்டும்.

  தமிழில் நீங்கள் எழுதும் கே என்ற ரெட்ட கொம்பை மாற்றி உருவாக்கியவர் வீரமாமுனிவர் என்றும், 3 சுழி ணா என்ற வார்த்தையை மாற்றி உருவாக்கியவர் தந்தை பெரியார் என்றும் கூறினார்.

  இந்த வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள எம்.பி. சு. வெங்கடேசன், அண்ணாமலை அவர்களே நீங்கள் நாத்திகர் பெரியாருக்கும், கிறிஸ்தவர் வீரமாமுனிவருக்கும் நன்றி கடன் பட்டுள்ளீர்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Annamalai, BJP, Su venkatesan