• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை - பொன். ராதாகிருஷ்ணன்

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை - பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்ககூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியுடன் உள்ளதாகவும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மேகதாது  அணைக்கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை, ஆய்வு அறிக்கை தாக்கல் செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், திமுகவே வேண்டாம் என்று ஒதுக்கினாலும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் விலக கூடிய நிலையில் இல்லை என்று விமர்சித்தார்.

    மேலும், திமுக திட்டமிட்டு சில விஷயங்களில் ஈடுப்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர் காங்கிரஸ் கட்சியின் பங்குதாரர்கள் போல் திமுக செயல்ப்படுவதாகவும் தெரிவித்தார்.

    50 வருடங்களாக தமிழர்களை சின்னாபின்னமாக்கிய கழகங்கள் குறித்து தமிழகத்தில் தற்போது முடிவெடுக்க வேண்டிய நிலையில் மக்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

    மேகதாது அணைக்கட்ட அனுமதி அளித்தால் தமிழகத்தில் பிரதமரை அனுமதிக்கமாட்டோம் என்ற ஸ்டாலினின் கருத்துக்கு பதிலளித்த பொன். ராதாகிருஷ்ணன் பிரதமரை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்று சொல்ல யாருக்கு தகுதி உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

    காவிரி விவகாரத்தில் திமுக காங்கிரஸ் தமிழர்களுக்கு துரோகம் விளைவித்துவிட்டதாகவும், 1.50 லட்சம் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணை நின்ற திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தமிழர்கள் பற்றி பேச அருகதை கிடையாது என்றும், இதுகுறித்து வைகோ, திருமாவளவன் போன்றவர்கள்தான் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மேகதாது விவகாரத்தை பொருத்த வரையில் அணைக்கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை, ஆய்வு அறிக்கை தாக்கல் செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதிக்ககூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக இருப்பதாகவும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: