கோளாறென்றால் ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் வாக்கு பதிவாவதில்லை? - எம்.பி ஜோதிமணி கேள்வி

கோளாறென்றால்  ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் வாக்கு பதிவாவதில்லை? - எம்.பி ஜோதிமணி கேள்வி

ஜோதிமணி எம்.பி

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு என்றால் ஏன் எப்போதும் தாமரையில் வாக்குப் பதிவாகிறது. வேறு சின்னத்தில் பதிவாவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றுமுடிந்தது. நேற்று, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தியாவில் 2004-ம் ஆண்டு முதல் மின்னணு வாக்கு இயந்திரம் முறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக வாக்கு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீது பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவருகின்றனர். மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவரவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இருப்பினும், தேர்தல் அனைவரது கருத்துகளையும் நிராகரித்துவிட்டது. நேற்று நடைபெற்ற வாக்குப் பதிவின்போதும், மாநிலத்தின் சில பகுதிகளில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. வாக்கு இயந்திர கோளாறு காரணமாக அமைச்சர் செல்லூர் ராஜூ, பொன்.ராதாகிருஷ்ணன்

    காத்திருந்து வாளித்தனர்.

    மேலும், ஒரு சில இடங்களில் எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தாலும் பா.ஜ.கவுக்கு வாக்கு விழுவதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ட்விட்டர் பதிவில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது இயற்கையானதாகக் கூட இருக்கலாம். அதெப்படி ஒவ்வொரு முறையும்,எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்தியரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது? ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: