ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியர்களா? தயாநிதி மாறன் எம்.பி கண்டனம்...

இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியர்களா? தயாநிதி மாறன் எம்.பி கண்டனம்...

தயாநிதி மாறன் (கோப்புப் படம்)

தயாநிதி மாறன் (கோப்புப் படம்)

இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியர்கள் எனக் கூறுவது மிகவும் கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியர்கள் என கூறுவது மிகவும் கண்டனத்திற்குரியது என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் கொரோனா  ஊரடங்கினால், ஏழை எளிய குடும்பங்களுக்கு இலவசமாய் அரிசி வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், கனிமொழி எம்.பி-க்கு மட்டுமில்லாமல், ஒவ்வொரு விமானநிலையத்திலும் இதுபோன்று நடைபெற்று வருகிறது.

Also read... கொரோனா தடுப்பு பணிகளில் திமுக என்ன செய்தது? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..

நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்கள் எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்படுவார்கள். இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியர்கள் என கூறுவது மிகவும் கண்டனத்திற்குரியது.

இதனை உரிய இடத்திற்கு எடுத்து செல்வோம். அந்தந்த மாநில மொழி பேசுகிறவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றார். மேலும், தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்று அனைவருக்கும் தெரியும். தேவையில்லாத சர்ச்சை பேச்சுகளை பாஜகவினர் பேசிக்கொண்டு இருக்கின்றனர். பாஜக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளதாக கற்பனையில் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

First published:

Tags: Airport, Dhayanidhi Maran, Imposing Hindi, Kanimozhi