Home /News /tamil-nadu /

குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் நோக்கம் நிறைவேறாது... தயாநிதி மாறன்!

குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் நோக்கம் நிறைவேறாது... தயாநிதி மாறன்!

தயாநிதி மாறன் (கோப்புப் படம்)

தயாநிதி மாறன் (கோப்புப் படம்)

  • News18
  • Last Updated :
குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அழிக்க நினைக்கும் மத்திய அரசின் நோக்கத்தை நிறைவேற விடமாட்டோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தயாநிதி மாறன், இந்தி பேசும் இந்துக்களுக்கு ஆதரவாகவும், தமிழ்பேசும் இந்துக்களுக்கு எதிராகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிமுக ஆதரிக்காமல் இருந்திருந்தால் இந்த சட்டம் நிறைவேற நிறைவேறி இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக எடுக்கும் ஒவ்வொரு நிலைப்பாட்டால் தமிழக மக்கள் தலைகுனிந்து நிற்பதாக தெரிவித்தார். மதவாத சக்திகளின் வாக்கு வங்கிக்காக நாட்டை கூறு போட நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

கடந்த தேர்தலில் 500 கோடி ரூபாயை அறுவடை செய்த ஒரே விவசாயி பாமக நிறுவனர் ராமதாஸ் என்று கூறினார். கூட்டணி நிர்பந்தத்திற்காக குடியுரிமை சட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் ஆதரவு அளித்ததாக அவரது தந்தை கூறியிருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி