முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து பேசியது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழக்கறிஞர் மூலமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா விளக்கம் கடிதம் கொடுத்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த விளக்க கடிதத்தை வழக்கறிஞர் பச்சையப்பன் தலைமைத்தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் கொடுத்துள்ளார்.
அந்த கடித்தத்தில், திராவிட இயக்கத்தில் வளர்ந்த நான் ஒரு போதும் பெண்மையையோ தாய்மையையோ இழிவாக பேசியதில்லை,பேசுபவனும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,தன்னுடைய பேச்சை திரித்து, அரசியல் காரணங்களுக்காக, நான் பேசியதற்கு புறம்பாக உள் அர்த்தங்களை கற்பித்து அதிமுக பா.ஜ.கவினரால் தேர்தல் நேரத்தில் ஆதாயத்திற்காக பேசப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவின் புகார் நகலையும் தேர்தல் ஆணையம் கவனத்திற்கு எடுத்துக்கொண்டமுழு விவரங்களையும் தனக்கு அளிக்க வேண்டும் என்றும் , அவற்றை பெற்றப்பின் முழு விளக்கம் கொடுப்பதாக ஆ.ராசா தன்னுடைய பதிலில் தெரிவித்துள்ளார்.
Also read... தடைபடுமா திருச்சி தேர்தல்? சிபிஐ விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை...!
நான் முதலமைச்சரை அவதூறாக பேசவேண்டும் என்ற உள்நோக்கம் இல்லை. என்னுடைய பேச்சு திரித்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
நான் பேசியது தொடர்பாக மன்னிப்பு கோரிய பிறகும் கூட இந்த விகாரத்தை முதலமைச்சர் உணர்வுபூர்வமான விவகாரமாக்கியுள்ளார் என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
நான் பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் இல்லை. மேலும் சட்டத்திற்கு புறம்பாகவோ பெண்களை இழிவுபடுத்தியோ என் பேச்சு இல்லை. பொதுமக்கள் புரிந்து கொள்ளும் விதமாக உவமானத்தை மேற்கொள்காட்டி முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினும் அரசியலில் உயர்ந்தை ஒப்பிட்டு பேசினேன். என்னுடைய முழுபேச்சையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் என் பேச்சில் எவ்வித அவதூறும் இல்லை என்பது தெரியவரும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா விளக்க கடிதம் அளித்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.