விவேக், கி.ராஜநாராயணன் உள்ளிட்டவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

விவேக் கி.ராஜநாராயணன்

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்று இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

 • Share this:
  தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. ஆளுநர் உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆளுநர் உரைக்குப் பிறகு சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் 3 தினங்களுக்கு நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

  அப்போது, இன்று மறைந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களும், சமூகத்துக்கு சிறப்பான பங்களிப்பைத் தந்த ஆளுமைகளான நடிகர் விவேக், எழுத்தாளர் கீ.ராஜநாராயணன் உள்ளிட்டோர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்றுகாலையில், 10 மணிக்கு பேரவைக் கூடியதும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேருக்கும் சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். மு.பாண்டுரங்கன், அ.முஹம்மத்ஜான், அ.பாப்பாசுந்தரம், முனைவர் செ.அரங்கநாயகம், தி.செ.விஜயன், வி.எஸ்.இராஜி, கி.இரா.இராஜேந்திரன், ச.சகாதேவன், எல்.சுலோசனா, கே.பி.ராஜு, கி.ராமச்சந்திரன், எம்.அன்பழகன், ஜெ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதேபோல, எழுத்தாளர் கீ.ராஜநாராயணன், நடிகர் விவேக், சுதந்திரப் போராட்ட வீரர் துளசி வாண்டையார், இந்திய அரசியல் சபை உறுப்பினர் மற்றும் முதல் சட்டப் பேரவை உறுப்பினர் டி.எம்.காளியண்ணன், முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
  Published by:Karthick S
  First published: