நீலகிரி மாவட்டத்தில், குன்னூர், உதகை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு திரும்புகையில், அடர்லி-ஹில்குரோவ் பகுதியில் தண்டவாளத்தில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்திருந்தால், மலை ரயில் நிறுத்தப்பட்டது. பேருந்து மூலம் பயணிகள் மேட்டுப்பாளையம் அனுப்பிவைக்கப்பட்டனர்.
மலை ரயில் மீண்டும் குன்னூருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. சீரமைப்பு பணி நடப்பதால் இன்று ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் 9 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த மலை ரயில் சேவை, கடந்த 31-ம் தேதிதான் மீண்டும் தொடங்கியது.