முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணுஉலைகள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்து

கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணுஉலைகள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்து

கூடங்குளம்

கூடங்குளம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, மூன்று மட்டும் நான்காவது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள அமைக்க, எல் அண்ட் டி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, அணு உலை கட்டடம், அணு உலை துணைக் கட்டடம், டர்பைன் மற்று டீசல் ஜெனரேட்டருக்கான கட்டடம் போன்றவற்றை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 64 மாதங்களில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்த மதிப்பு 2,500 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதியதாக அமைக்கப்பட உள்ள 2 அணு உலைகளும் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மொத்த உற்பத்தி திறன், ஆறாயிரம் மெகாவாட்டாக அதிகரிக்க உள்ளது. 6 அணு உலைகளை கொண்ட முதல் ஒளிநீர் உலையாக கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Koodankulam, Nuclear Power plant