• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்தது!

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்தது!

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

  • News18
  • Last Updated :
  • Share this:
    பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்திருப்பதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் கடந்த சில நட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த போது, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தலா ₹1.50 குறைப்பதாக அறிவித்தார். மேலும், எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ₹1 குறைப்பதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அருண் ஜெட்லி,  இதன்மூலம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹2.50 விலை குறையும் என்றார்.

    இந்த விலை குறைப்பின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.10,500 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்த ஜெட்லி, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், கச்சா எண்ணெய் தொடர்பான சர்வதேச சந்தை நிலவரம் நிலையற்றதாக உள்ளதாக குறிப்பிட்ட அருண் ஜெட்லி, இதை எதிர்கொள்ளும் வகையில் இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது என்றார்.

    சென்னையில் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் அதிகரித்து, பெட்ரோல் லிட்டர் 85.4 ரூபாயாக விற்கப்படுகிறது. இதேபோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து லிட்டர் 77.73 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளிக்கிழமை பெட்ரோல், டீசல் மீதான வரியை எண்ணெய் நிறுவனங்கள் 1 ரூபாய் குறைத்தன. ஆனால், இரண்டே நாட்களில் டீசல் விலை 60 காசுகள் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: