ஒரு வயது குழந்தைகளைக் கொன்று தாய்கள் தற்கொலை: ஒரே நாளில் இரு இடங்களில் நடந்த துயரம்

திருப்பூர் மற்றும் கடலூரில் தங்கள் ஒரு வயது குழந்தையை கொன்றுவிட்டு இரண்டு தாயார் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
திருப்பூர் ஊரக காவல் எல்லைக்கு உள்பட்ட ஜெய்நகரில் வசித்து வருபவர் 34 வயதான மகுடீஸ்வரன். இவரது மனைவி 24 வயதான நித்யா. இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் தர்ஷன் என்கிற மகன் இருந்தார். மகுடீஸ்வரன் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் கடந்த 3 நாள்களாக நித்யா வீட்டில் சமைக்காமல் இருந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், மகுடீஸ்வரன் வேலைக்குச் சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது படுக்கை அறை உள்புறமாகத் தாழிடப்பட்டு இருந்துள்ளது.

கதவை நீண்ட நேரம் தட்டியும் நித்யா திறக்காததால், அதிர்ச்சியடைந்த மகுடீஸ்வரன் கதவை உடைத்துப் பார்த்தபோது குழந்தை கட்டிலில் இறந்து கிடந்துள்ளது. மேலும், நித்யாவும் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


ALSO READ : கோணலாக, விநோத உருவத்தில் விளைந்த தக்காளி...காலாவதியான விதையால் விவசாயிக்கு நேர்ந்த சோகம்

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நித்யாவின் தற்கொலை கடிதம் ஒன்றை கைப்பற்றி விசாரித்து வருகினற்னர். அதில் தனக்கு தனது கணவர், மாமனார், மாமியார் செய்த கொடுமைகள் குறித்து எழுதியுள்ளார். ஆனால் அவர்கள் யாரையும் தனது தற்கொலைக்கான காரணமாக குறிப்பிட விரும்பவில்லை என்றும் காலமே அவர்களுக்கான உரிய தண்டனையை வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தின் அடிப்படையில் நித்யாவின் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமாகி 2 ஆண்டுகளே ஆனதால் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைத்துள்ளனர். இதனிடையே மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். கணவர், மாமனார், மாமியார் கொடுமையால் பச்சிளம் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூரைப் போல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலிலும் ஒரு வயது குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா.கொளக்குடியை சேர்ந்தவர் 24 வயதான பாலமுருகன். இவர் தனியார் சுய உதவிக் குழுக்களில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.

ஆட்கொண்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான பிரியங்கா என்பவரை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலமுருகன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த வருடம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு திங்கட்கிழமை முதல் பிறந்தநாள் கொண்டாட இருந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தாயும், குழந்தையும் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்கு பதிவு செய்து அக்கம் பக்கம் விசாரித்தனர். விசாரணையில், பாலமுருகன் குடிபோதைடிககு அடிமையாகி உள்ளார். நாள்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று பிரியங்காவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த பிரியங்கா குழந்தையை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தாய், குழந்தை மரணம் தற்கொலை தானா, மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் வருவாய்துறையினர் விசாரணையும் நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை குழந்தை, முதல் பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் தாயும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading