குழந்தைகளை தவிக்கவிட்டு போலீஸ்காரர் மகனுடன் சென்ற நர்ஸ் - காதலனுடன்தான் வாழ்வேன் என அடம்.. கணவர் தவிப்பு

Youtube Video

25 வயதான அபிஷேக் குமார் தந்தையை பார்க்க அடிக்கடி மருத்துவமனைக்கு வந்துள்ளார். மனைவியை பிரிந்து வாழ்ந்த அபிஷேக் குமாருக்கு, ஆஷா மெர்சி இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

 • Share this:
  திருச்சி மாவட்டம் எடமலைபட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 44 வயதான குமரவேல். இவருக்கும் ஆஷா மெர்சி என்பவருக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.திருச்சியில் தனியார் மருத்துவமனையில் ஆஷா மெர்சி நர்ஸாக பணியாற்றி வருகிறார். குமரவேல் இன்டீரியர் டெக்கரேட்டராக வேலை செய்து வருகிறார்.

  சில மாதங்களுக்கு முன்னர் பீம்நகரைச் சேர்ந்த செல்வகணபதி என்ற காவல் உதவி ஆய்வாளருக்கு விபத்து ஏற்பட்டு ஆஷா மெர்சி வேலை பார்த்து வரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

  செல்வ கணபதியின் மகன் 25 வயதான அபிஷேக் குமார் தந்தையை பார்க்க அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளார். மனைவியை பிரிந்து வாழ்ந்த அபிஷேக் குமாருக்கு, ஆஷா மெர்சி இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

  கடந்த 2-ஆம் தேதி ஆஷா மெர்ஷி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. போனில் தொடர்புகொண்டபோது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால், மனைவியை காணவில்லை எனக்கூறி குமரவேல் எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

  போலீசார் விசாரணை நடத்தியபோது, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலில் அபிஷேக்குமாரும் ஆஷா மெர்சியும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

  சட்ட ரீதியாக இருவரும் முதல் துணையிடம் இருந்து விவகாரத்து பெறாத நிலையில் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஆஷா மெர்சி அபிஷேக்குடன் வசித்து வரும் நிலையில், அவரிடம் பேசி அழைக்க கணவர் குமரவேல் முயன்றபோது, அபிஷேக் கடுமையான சொற்களால் திட்டியுள்ளார்.

  மேலும் படிக்க...ரசிகர்கள் வைரலாக்கிய காஜல் அகர்வால் திருமண ரிசப்ஷன் புகைப்படம்..  ஆஷாவை திரும்ப வீட்டுக்கு வருமாறு அவரது தாயார் கெஞ்சி அழைத்தபோதும், அவர் வீடு திரும்ப மறுத்துவிட்டார். தாயை பிரிந்த குழந்தைகள் இருவரும் அழைத்தும் வர மறுத்த ஆஷா, தன்னுடன் வருமாறு குழந்தைகளை அழைத்துள்ளார். அபிஷேக் காவல்துறை அதிகாரியின் மகன் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்காமல் தன்னை மிரட்டுவதாக குமரவேல் குற்றம்சாட்டியுள்ளார்.

  இது தொடர்பாக ஆஷாவிடம் கேட்டபோது, குமரவேலுவுக்கும் தனக்கும் அதிக வயது வித்தியாசம் உள்ளதாகவும், வயதை மறைத்து அவர் தன்னை திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார்.

  இனி குமரவேலுடன் வாழ தயாராக இல்லை என்றும், அபிஷேக்குடன் தான் வாழ்வேன் என்றும் கூறியுள்ளார். குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடி உரிய தீர்வு பெறுவேன் என்று கூறியுள்ளார்.
  Published by:Vaijayanthi S
  First published: