HOME»NEWS»TAMIL-NADU»mother trying to kill her child in kanchipuram for her illicit love crime video vai
கொடூரத்தின் உச்சம்: குழந்தையின் கழுத்தை நெறிக்கும் தாய்- குலைநடுங்க வைக்கும் வீடியோ
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முறையற்ற வாழ்விற்கு தடையாக இருந்த குழந்தையை தாயே கழுத்தை நெரித்து கொல்ல முயற்ச்சிக்கும் பதரவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது இறக்கமற்ற தாய் சிக்கியது எப்படி?
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிப்பட்டு, காமராஜ் நகரை சேர்ந்தவர் 20 வயதான சித்ரா. தாய், தந்தை உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் தனியாக அந்த பகுதியில் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகமல் கள்ள தொடர்பு மூலமாக 5 வயதில் கார்திக், 2 வயதில் அருண் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு கருமாங்கழனி பகுதியை சேர்ந்த 45 வயது ஆனந்தன் என்பவரை குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சித்ரா திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆனால் சித்ராவிற்கும், ஆனந்திற்கும் அடிக்கடி தகறாறு ஏற்பட்டுள்ளது . மேலும் வீட்டில் ஆனந்தன் இல்லாத நேரத்தில் சித்ரா சில ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்துள்ளார். இந்த விவகாரம் ஆனந்திற்கு தெரியவர கடந்த வாரம் இருவருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சித்திரா தனது உல்லாசத்தை ஆனந்திடம் தெரிவித்த குழந்தை கார்திக்கை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
அத்துடன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார். இரண்டு நிமிடத்திற்கு மேல் குழந்தையின் கழுந்தை நெரித்த சித்திரா குழந்தையை தூக்கி வீசியுள்ளார். பதற்றமடைந்த குழந்தை கார்திக் தாய் சித்திராவிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த முட்புதரில் ஒளிந்துகொண்டு இரவு முழுவதும் பதுங்கி இருந்துள்ளான். குழந்தையை மீட்ட அருகில் இருந்தவர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர், சித்ராவை அழைத்து போலீஸ் விசாரிக்கும் போதுதான் சித்ராவின் கொடூர முகம் தெரியவந்துள்ளது.
குழந்தையை கொலை செய்ய முயன்ற போது எவ்வளவு தடுத்தும் முடியாததால் தற்காற்பிற்காக ஆனந்தன் எடுத்து வைத்திருந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் சித்ராவின் மற்றொரு மகனாக 2 வயது அருண் இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறி அருணை மருத்துவனையில் சேர்த்துள்ளார் சித்ரா. 60 சதவீதம் தீகாயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தை அருண் வீடு திரும்பிய சில நாட்களில் உயிரிழந்தது.
குழந்தை அருணின் இறப்பும் மர்மாக உள்ள நிலையில் மற்றொரு குழந்தையின் கழுத்தை சித்ரா நெரித்து கொள்ள முயிற்சிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. போலீசாரின் கண்காணிப்பில் இருக்கும் குழந்தை கார்திக்கை குழந்தைகள் நல அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைக்க உள்ளனர்.
வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் சித்ராவின் இரண்டாவது மகன் அருண் தீ காயமடைந்து இறந்தானா அல்லது மண்ணெண்ணெய் ஊற்றி சித்ரா கொலை செய்தாரா என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உல்லாச வாழ்விற்கு தடையாக இருந்த குழந்தையை தாயே கொலை செய்ய முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.