• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பணத்திற்காக கொடுமைப்படுத்திய மகனால் தாய் தற்கொலை!

பணத்திற்காக கொடுமைப்படுத்திய மகனால் தாய் தற்கொலை!

தற்கொலை செய்துக்கொண்ட தாய்

தற்கொலை செய்துக்கொண்ட தாய்

பணத்திற்காக மகனே தாயைக் கொடுமைப்படுத்தி தற்கொலைக்குத் துாண்டிய சம்பவம் வல்லம்படுகையில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சீர்காழியில் பணத்திற்காக பெற்ற தாயை மகனே அடித்துக் கொடுமைப்படுத்தியதால், விரக்தியடைந்த தாய் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம் படுகையைச் சேர்ந்தவர் இலஞ்சியம். இலஞ்சியத்தின் கணவன் கலியபெருமாள் கடந்த 6 மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.

இந்த தம்பதிக்கு 3 மகன்கள், மூத்த மகன் சென்னையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். 2-வது மகன் அரங்கநாதன், வல்லம்படுகையிலும் 3-வது மகன் ஆனந்தன் சென்னையிலும் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர்.

தாய் இலஞ்சியம்


மூத்த மகனின் இழப்பீட்டுத்தொகை  1, 20, 000 ரூபாய் இலஞ்சியத்திற்கு கிடைத்தது. அந்த தொகையை தனக்கு கொடுக்கும்படி 2-வது மகன் அரங்கநாதன் தாயை அடித்து துன்புறுத்தி வந்தார். அவரது கொடுமை தாங்க முடியாமல், சென்னையில் உள்ள 3-வது மகன் ஆனந்தன் வீட்டிற்கு இலஞ்சியம் சென்று விட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இலஞ்சியம் மீண்டும் வல்லம்படுகை வந்தார். அப்போது கடந்த 5-ம் தேதி, தாயைப் பார்க்க வந்த அரங்கநாதன், மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது தாயை சாகும்படி திட்டியுள்ளார். இல்லாவிடில் தானே கொன்று விடுவதாக அரங்கநாதன் மிரட்டி விட்டு சென்றுள்ளார்.

பணத்திற்காக தாயை அடித்து கொடுமைபடித்திய மகன்


இதனால் மனம் விரக்தி அடைந்த இலஞ்சியம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3-வது மகன் ஆனந்தனின் புகாரின் பேரில், தாயைத் தற்கொலைக்குத் துாண்டியதாக அரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.

அரங்கநாதனை சிதம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், 15 நாள் நீதிமன்ற காவலில் சிறை வைத்தனர்.

பணத்திற்காக மகனே தாயைக் கொடுமைப்படுத்தி தற்கொலைக்குத் துாண்டிய சம்பவம் வல்லம்படுகையில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also see... சாதி பிடியிலிருந்து அம்பேத்கர் வெற்றி கண்ட வரலாறு! 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: