காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்

தனது காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அபி தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

Yuvaraj V | news18
Updated: August 18, 2019, 8:41 AM IST
காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
Yuvaraj V | news18
Updated: August 18, 2019, 8:41 AM IST
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகளை இறந்துவிட்டதாக கூறி பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் மன்னராஜா வடக்கு தெருவை சேர்ந்தவர் அமராவதி. இவரது கணவர் பன்னீர்செல்வம் இறந்துவிட்ட நிலையில் தனது மூன்று மகள்களுடன் வசித்து வந்தார். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், இரண்டாவது மகள் அபி கல்லூரியில் படித்து வருகிறார்

அபி அதே பகுதியை சேர்ந்த இளைஞர் சந்தோசை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அமராவதி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அபி தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.


தன் மகள் தன் பேச்சை கேட்காமல் வீட்டைவிட்டு வெளியேறியதால் ஆத்திரமடைந்த அமராவதி தனது மகள் அபி இறந்துவிட்டதாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also watch

Loading...

First published: August 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...