வேலூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை, அதன் தாயின் கள்ளக்காதலன் சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
வேலூரை அடுத்த அரியூர் பகுதியில் கணவரை பிரிந்த விசித்திரா, உதயகுமார் என்பவருடன் நட்புடன் பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் உதயகுமாரும், விசித்திராவும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இருவரின் தகாத உறவுக்கு விசித்திராவின் இரண்டு வயது பெண் குழந்தை இடையூறாக இருப்பதாக உதயகுமார் கூறியுள்ளார். அத்துடன் அந்த குழந்தைக்கு சிகரெட்டால் பல இடங்களில் சூடு வைத்துள்ளார். மேலும் பலவிதமான கொடுமைககளையும் செய்துள்ளார்.
இதற்கு குழந்தையின் தாய் விசித்திராவும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த வேலூர் போலீசார், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலூம் பார்க்க... என்னை காப்பாற்றுங்கள் என ரத்தத்தால் பாத்ரூம் சுவரில் ரத்தத்தால் எழுதிய பெண்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.