Home /News /tamil-nadu /

தகாத உறவால் பிறந்ததால் குழந்தையை கழிப்பறையில் கொன்ற தாய்.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

தகாத உறவால் பிறந்ததால் குழந்தையை கழிப்பறையில் கொன்ற தாய்.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

தகாத உறவால் பிறந்ததால் குழந்தையை கழிப்பறையில் கொன்ற தாய்.

தகாத உறவால் பிறந்ததால் குழந்தையை கழிப்பறையில் கொன்ற தாய்.

தஞ்சையில் தவறான உறவால் பிறந்த பெண் சிசுவை, மருத்துவமனை கழிவறையில் வைத்து கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்காம் தேதி  அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறை தண்ணீர் தொட்டியில், பிறந்த பெண் சிசு, தொப்புள் கொடியுடன் இறந்து கிடப்பதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள்  உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

மேலும் குழந்தையை கழிவறையில் போட்டது யார்? அல்லது கழிவறையில் பிரசவம் நடந்து குழந்தையை விட்டு சென்றனரா  என பல்வேறு கோணங்களில் விசாரணை  செய்தனர். மேலும் சிசிடிவி கண்காணிப்பு கேமாராவில் ஒரு பெண் மற்றும் சந்தேக்கிக்கும் முறையில் சுமார் 30 நிமிடங்கள் கழிவறையில் இருந்துள்ளார். இதன் அடிப்படையில் அப்பெண் யார் எனவும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அப்பெண் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே ஆலங்குடி பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி(24) என்பது தெரியவந்துள்ளது.  காவல்துறையினர் கைது   செய்து அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அப்பெண்ணிற்கு இதுவரை திருமணம் ஆகவில்லை என்றும், தவறான உறவால் கர்ப்பமான பிரியதர்ஷினி நிறை மாதத்துடன் மருத்துவ கல்லூரி மருத்துலமனை வளாகத்தில் சுற்றி வந்துள்ளார்.

Also read : போலீஸ்காரர்களுக்கு காதல் வலை விரித்து பல லட்சங்களை சுருட்டிய பலே பெண்

இந்நிலையில் பிரசவ வலி வந்த உடன், அவசர சிகிச்சை  பிரிவில் உள்ள கழிவறையில் சென்று குழந்தையை பெற்று, தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும்  இச்சம்பவத்திற்கு அவரது பெற்றோரும் உடந்தையாக இருக்கலாம் என  அவர்களையும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
Published by:Vijay R
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Tanjore

அடுத்த செய்தி