இரண்டு மகள்களுக்கும் விஷம் கொடுத்துகொன்று தாய் தற்கொலை - தேனியில் பரபரப்பு

தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக இரண்டு மகள்களுக்கு விஷ விதைகள் கொடுத்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசரணை செய்துவருகின்றனர்.

இரண்டு மகள்களுக்கும் விஷம் கொடுத்துகொன்று தாய் தற்கொலை - தேனியில் பரபரப்பு
தற்கொலை செய்துகொண்ட பெண்
  • Share this:
தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் குமார் செண்பகவள்ளி(29) தம்பதி. இவருக்கு சுரேனா(10) மற்றும் சுரேஸ்ரீ(7) என இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் சுதர்சன் (3) என்ற மகனும் உள்ளனர். கணவர் சுரேஷ்குமார் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கணவன் மனைவி இருவருக்குமிடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில்  செண்பகவள்ளி மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கணவர் மற்றும் மகன் இல்லாத நிலையில் தற்கொலை செய்ய கொள்ள முடிவு எடுத்ததாக தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து விஷ விதைகளை (அரளி விதயை) அரைத்து அருந்தி தன் இரண்டு மகள்களுக்கும் கொடுத்துள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் செண்பகவள்ளி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் தீவிர சிகிச்சையில் இருந்த இரண்டு குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து செண்பகவள்ளியின் தந்தை முனியாண்டி, கானாவிலக்கு காவல் நிலையத்தில் தனது மகள் 2 ஆண்டுகளாக தீராத வயிற்று வலியில் இருந்ததாகவும், இதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தான் இறந்த பிறகு மகள்களை யார் பராமரிப்பார் என குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.


அதன் அடிப்படையிலே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாய் தனது இரு மகள்களுக்கும் விஷம் கொடுத்து  தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: October 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading