3 வயது குழந்தை இறந்த வழக்கில் ஓராண்டுக்கு கழித்து தாய் கைது.. சென்னை கொருக்குப்பேட்டையில் நடந்த கொடூரச் சம்பவம்

கோப்புப்படம்.

சென்னை கொருக்குபேட்டையில் 3 வயது குழந்தை மர்மமான முறையில் இறந்த வழக்கில் ஓராண்டுக்கு கழித்து தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  சென்னை கொருக்குப்பேட்டையில் 3 வயது குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் ஒர் ஆண்டிற்கு பிறகு குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். கொருக்குப்பேட்டை இளைய தெருவைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் - நதியா தம்பதி. இவர்களின் மூன்று வயது ஆண் குழந்தை இஷாந்த் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

  இவர் கடந்த ஜனவரி மாதம் கட்டிலில் இருந்து தவறி விழுந்ததாக கூறி பெற்றோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

  Also read: தனிக்குடித்தனம் கேட்ட காதல் மனைவி.. திருமணமான மூன்றே மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை - தென்காசியில் சோகம்

  இந்த நிலையில், குழந்தை இஷாந்தின் உடற்கூராய்வு அறிக்கையில், தலையில் தாக்கியதால் மண்டை ஓடு உடைந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தாய் நதியாவை கைது செய்த போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: