திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த எஸ்தர் பேபி, கணவரை பிரிந்து தாய் சகாயராணியுடன் வசித்துவந்தார். தனது மகளை காணவில்லை என 2014 ஆம் ஆண்டு சகாயராணி வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
காணாமல்போன எஸ்தரை ஒரு சில நாட்கள் தேடிப்பார்த்த போலீசார், கணவர், தந்தை உள்ளிட்டோரிடம் விசாரித்தனர். ஆனால், வழக்கில் எந்த துப்பும் கிடைக்காததால் வழக்கை போலீசார் கிடப்பில் போட்டனர்.
சென்னை பள்ளிக்கரணையில் ஆட்டோ ஓட்டிவந்த சகாயராணியின் சகோதரர் அருண் சேவியரை, கொலை வழக்கில் போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர்,
இளைஞர் கழுத்தில் அணிந்திருந்த செயினுக்காக கொலை செய்ததையும், அதற்கு முன்னர் தனது மகனின் காதலியையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும், திருப்பூரில் தனது அக்காவின் மகளை, அக்காவுடன் சேர்ந்து கொலை செய்து புதைத்துவிட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அருண் சேவியரை சிறையில் அடைத்த பள்ளிக்கரணை போலீசார், இது குறித்து திருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எஸ்தர் பேபி காணாமல் போன வழக்கை திருப்பூர் போலீசார் தூசிதட்டி மீண்டும் விசாரணைக்கு எடுத்தனர்.
தன் மகள் காணாமல் போனதில் தனது மனைவி தம்பி அருண்சேவியரை விசாரிக்க வேண்டும் என எஸ்தரின் தந்தை வீரபாண்டி காவல்நிலையத்தில் மீண்டும் ஒரு புகாரை அளித்துள்ளார்.
அருண் சேவியரிடம் காவலில் எடுத்து விசாரித்த திருப்பூர் போலீசாரிடம் எஸ்தர் பேபியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
ஆனால், வழக்கில் திடீர் திருப்பமாக, எஸ்தர் பேபியின் தாய் சகாயராணியை அழைத்து விசாரித்த போதுதான் கள்ளக்காதல் விவகாரம் அம்பலமானது.
கணவரை பிரிந்து வாழ்ந்த சகாயாராணிக்கு பாக்கியராஜ் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. தாயின் கள்ளத்தொடர்பை மகள் எஸ்தர் பேபி கண்டித்துள்ளார்.
ஆனால் தனது கள்ளக்காதலை கைவிட மறுத்த சகாயராணி, மகளையும் பாக்கியராஜின் ஆசைக்கு இணங்கச் சொல்லி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த எஸ்தர்பேபி, தாயின் கள்ளக்காதல் குறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்து கண்டிக்கக் கோரியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சகாயராணி, அவரது கள்ளக்காதலர் உடன் சேர்ந்து மகள் எஸ்தர் பேபியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்த தனது தம்பி அருண் சேவியரிடமும் சகாயராணி பேசியுள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி எஸ்தர் பேபியை கொலை செய்து வீட்டிலேயே புதைத்துள்ளனர்.
சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக 4 நாட்கள் கழித்து 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி மகளை காணவில்லை என வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தது தெரிய வந்தது.
இதை அடுத்து, புதன்கிழமை போலீசார் மற்றும் மருத்துவத் துறையினர் வீரபாண்டி பகுதியில் உள்ள சகாயராணி வீட்டிற்கு சென்று எஸ்தர் பேபி உடலை தோண்டி எடுத்தனர். ஆறு வருடங்கள் ஆன நிலையில் எலும்புக் கூடாக இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
Also see... நிலப்பிரச்சனைக்காக ரேடியோவை வெடிக்கச்செய்து தம்பியைக் கொன்ற அண்ணன்: சிக்கியது எப்படி?
ஏற்கெனவே அருண் சேவியர் கைது செய்யப்பட்ட நிலையில், சகாயராணி மற்றும் பாக்கியராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் சுகத்திற்காக பெற்ற மகளை தாயே கொலை செய்த விவகாரம் திருப்பூர் மாவட்டதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.