மருமகள்கள் கொடுமை... கண்டுகொள்ளாத மகன்கள் - தாய் விஷம் அருந்தி தற்கொலை

மருமகள் கொடுமையால் மாமியார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருமகள்கள் கொடுமை... கண்டுகொள்ளாத மகன்கள் - தாய் விஷம் அருந்தி தற்கொலை
காவல் நிலையம்
  • Share this:
சீர்காழியில் மருமகள்கள் கொடுமை தாங்க முடியாமல் மாமியார் விஷம் அருந்தி தாற்கொலை செய்துக் கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி அருமைகண்ணு. இவருக்கு ராகவன், வீரமணி என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர் அரசின் மூலம் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகையை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார்.

கலியபெருமாள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் அருமைகண்ணு தனது இரண்டாவது மகன் வீரமணி வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்பொழுது வீரமணியின் மனைவி கண்ணகிக்கும் இவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் தனது மகன் தட்டிக்கேட்கவில்லை என மனமுடைந்த அருமைகண்ணு அரளி விதையை அரைத்து குடித்து விட்டு நாங்கூர் பகுதியிலுள்ள புளியமரத்தடியில் படுத்து கிடந்துள்ளார்.


உயிருக்கு போராடிய அருமைகண்ணுவை பார்த்த அருகில் இருந்தவர்கள், மகன் வீரமணியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தாய் உயிருக்கு போராடிய நிலையில் படுத்து கிடந்துள்ள இடத்திற்கு நேரில் சென்று  தாயை வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளார் வீரமணி. அப்பொழுது அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

அருமைகண்ணு தற்கொலை செய்துக் கொண்ட இடம்


அதனை ஏற்க மறுத்து வீரமணி தாயை வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு கொண்டு சென்ற அருமை கண்ணு விடியற்காலையில் உயிரிழந்துள்ளார் . இதனையடுத்து திருவெண்காடு போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே அருமை கண்ணு மயங்கிக் கீழே விழுந்து கிடந்த போது வீடியோ வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் தனக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும் அவர்கள் தன்னை கண்டுகொள்ள வில்லை, அடிக்கடி மருமகள்கள் தன்னை துன்புறுத்துவதாகவும் இதனால் மனமுடைந்து அரளி விதையை அரைத்து குடித்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருமகள் கொடுமையால் மாமியார் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also see...Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: May 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading