3 மாத குழந்தையை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை - பகீர் காரணம்

இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்த வருத்தத்தில் மூன்று மாத குழந்தையை கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 மாத குழந்தையை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை - பகீர் காரணம்
மாதிரிப் படம்
  • Share this:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த மூங்கில்பாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் - சங்கீதா தம்பதிக்கு, நிதர்சனாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவதாக சங்கீதா, ஆண் குழந்தையை எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் மனமுடைந்த சங்கீதா, தனக்கு பிறந்த மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தையை வீட்டிலுள்ள அண்டா தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also read... கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கு... ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு


Also see...
First published: June 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading