கல்லூரி, 12, 10-ஆம் வகுப்புகளில் படிக்கும் மகள்களை பாலியல் தொழிலில் தள்ளிய தாய் கைது.. (வீடியோ செய்தி)

தனது மகள்கள் மற்றும் மகள்களின் தோழிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரத் தாய் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 12:34 PM IST
  • Share this:
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளியூரை சேர்ந்த ஆண்களும் பெண்களும் வந்து சென்றனர். அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார் சென்றது. போலீசார் அந்த வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தக்கலை டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது இரண்டு அறைகளில், சிறுமிகளுடன் இருந்த ஆண்கள் இரண்டு பேர் அரை நிர்வாணத்தில் தப்பி ஓட முயன்றனர். சுற்றி வளைத்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஒருவர் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவல் ஆய்வாளரின் கணவரான குளச்சல் பகுதியை சேர்ந்த ராஜ்மோகன் என்பதும் மற்றொருவர் தக்கலை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுனில் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அந்த சிறுமிகள் மற்றும் பெண் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அந்த பெண் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் அவர் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது கல்லூரி மற்றும் 12-ம் வகுப்பு, 10-வகுப்பு படிக்கும் மூன்று மகள்களையும் அவர்களின் தோழியையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது.

மேலும் படிக்க.. அக்டோபர் 7 முதல் மீண்டும் தொடங்குகிறது சென்னை புறநகர் ரயில்கள் சேவை..இதனையடுத்து நான்கு சிறுமிகளையும் மீட்ட போலீசார் அவர்களை ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் பள்ளி, கல்லூரி செல்லும் மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய், பெண் காவல் ஆய்வாளரின் கணவர் ராஜ்மோகன், மற்றும் கூலி தொழிலாளி சுனில் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading