திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நிலத் தகராறில் தாயையும், மகனையும் கடப்பாறையால் குத்திக்கொலை செய்துவிட்டு, தப்பியோடிய 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, செருகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் மனைவி அலங்காரமேரி 50). அவருடைய மகன் அஜய் (24). ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கரின் அண்ணன் மகன்கள் அன்பழகன்(40), செபஸ்டின் (35).இந்நிலையில், இந்த இரண்டு குடும்பத்தாருக்கும் இடையே பூர்வீக இடம் தொடர்பாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அடிக்கடி இரண்டு குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை பாஸ்கரனின் மனைவி அலங்காரமேரி, அவரது மகன் அஜய் ஆகியோரை கடப்பாறையால் குத்தி விட்டு அன்பழகன் மற்றும் அவரது தம்பி செபஸ்டியன் ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதில் படுகாயமடைந்த அலங்காரமேரி, அஜய் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரது உடல்களையும் கைப்பற்றிய குடவாசல் காவல்துறையினர், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Must Read : 600 தட்டுகளில் லாரியில் வந்த சீர்வரிசை.. கெத்து காட்டிய அத்தைகள் - பிரம்மாண்டமாக நடந்த மஞ்சள் நீராட்டு விழா!
இதுகுறித்து வழக்குபதிவு செய்த குடவாசல் போலீசார், தப்பி ஓடிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தாய் மகன் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Murder, Thiruvarur